அஹ்மதாபாத்,மார்ச்.15:குஜராத் இனப் படுகொலைக் குறித்து விசாரணை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் ஆர்.கே.ராகவனுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடனான தவறான உறவைக் குறித்து சுதந்திரமாக விசாரணை நடத்தவேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி,மார்ச்.15:சங்க்பரிவார பயங்கரவாதிகள் இந்தியாவில் நடத்திய பல்வேறு குண்டுவெடிப்புகளைக் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம் ஒப்படைப்பதுக் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனைச் செய்துள்ளது.
காபூல்,மார்ச்:ஆப்கானிஸ்தான் மாகாணமான குனாரில் அந்நிய ஆக்கிரமிப்புப் படையான நேட்டோவின் கொடூரத் தாக்குதலில் 9 குழந்தைகள் கொலைச் செய்யப்பட்டதைக் கண்டித்து நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.
பாக்தாத்,மார்ச்.15:ஈராக்கில் ராணுவ தலைமையகத்திற்கு அருகே நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 10 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 14 ராணுவ வீரர்கள் உள்பட 29 பேருக்கு காயமேற்பட்டுள்ளது.
பெர்லின்,மார்ச்.15:ஜெர்மனியில் அணுசக்தி நிலையங்கள் செயல்படும் கால அளவை நீட்டிப்பதுக் குறித்த அரசுத் திட்டத்தை கண்டித்து ஸ்டூட்கர்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
மெல்பர்ன்,மார்ச்.13:ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவியொருவர் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்,மார்ச்.13:அமெரிக்க அரசுத்துறை செய்தித் தொடர்பாளர் பி.ஜே.க்ரவ்லி தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளார்.
இந்த வெடிப்பு காரணமாக மணிக்கு 20 மைல் வேகத்தில் அணுக்கதிர் வீச்சு பரவும் வாய்ப்பு உள்ளதாகவும், மக்கள் வேகமாக வெளியேற வேண்டும் என்றும் ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.
டோக்கியோ,மார்ச்.14:எனது அருகிலேயே இருக்கவேண்டுமென்ற தாயின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டிருந்தால், இவ்வளவுதூரம் துயரத்திற்கு ஆளாக வேண்டியதில்லை. வீடும், குடும்பமும் எல்லாவற்றையும் இழந்துவிட்டு நான் மட்டும் உயிரோடு வாழ்ந்து என்ன பயன்? ஜப்பானின் மியாகியில் ஷின்டோனா கிராமத்தில் ஹரூமிவதனாபெயின் வார்த்தைகள்தாம் இவை.
தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும் தேர்தல் களம் இன்னும் சூடு பிடித்ததாக தெரியவில்லை. அதிமுக கூட்டணியில் இன்னும் கூட்டணி கட்சிகள் யார் என்றே முடிவு செய்யப்படவில்லை. அம்மாவின் தரிசனத்திற்காக வைகோவும் காம்ரேட்களும் தவமாய் தவமிருந்தும் இதுவரை பிரயோஜனம் எதுவும் இல்லை. திமுக கூட்டணியில் தொகுதி எண்ணிக்கையில் முடிவு ஏற்பட்டுள்ள போதும் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதில் இன்னும் சிக்கல் தீர்ந்தபாடில்லை. நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கை பொறுத்த வரை சென்ற முறை பெற்றதை போன்று மூன்று தொகுதிகளை பெற்றுக்கொண்டு ஒன்றை கூட்டணி தர்மத்திற்காக விட்டுக்கொடுத்துள்ளனர்!
பின் தொடர்சியாய் அலையலையாய் தாக்கியுள்ளது அதனையடுத்து சுமார் 50 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை அனுப்பபட்டுள்ளது.
நகரமே நகர்ந்து செல்கிறது. வீடுகளும்,மாளிகைகளும், கட்டங்களும், வாகனங்களும், படகுகளும் மென்று தின்ற சக்கைகளாக, மந்திரத்திற்கு கட்டுப்பட்டு ராட்ச ஆழிஅலைகளுடனே மறு பேச்சின்றி பயணிக்கிறது.
கோபுரங்கள் மண்ணானது, மண்ணெல்லாம் தண்ணீரானது அது மக்களின் கண்ணீரானது. நில நடுக்கத்தை தொடர்ந்த தீ விபத்துக்களால் பற்றி எரியும் நகரங்கள், உடைந்து நொருங்கும் கட்டிடங்கள், அடித்துச் செல்லும் சுனாமி ஆழிப்பேரலை என்று எல்லா வகையிலும் அந்த சின்னஞ் சிறு நாட்டிற்கு பேராபத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானிய மக்களின் தன்னம்பிக்கையை பாராட்ட வேண்டும். அவர்களுக்கு துணையாய் உலக நாடுகள் முன்வரவேண்டும்.
ரொம்ப நாளாய் தாய் வீட்டிலேயே இருக்கும் கனிமொழியை மாமனார் வீட்டுக்கு கொண்டு செல்லும் நோக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரனையை தொடங்கியுள்ளனர்.
புதுடெல்லி,மார்ச்.14:உலகில் அதிக அளவு ஆயுதங்களை இறக்குமதிச் செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது. சீனாவை முந்திய இந்தியா ஆயுத இறக்குமதியில் முதலிடத்தை பிடித்துள்ளது.இன்ஷா அல்லாஹ், வருகிற மார்ச் 15ம் தேதியன்று இந்திய நேரப்படி இரவு 9 மணியளவில் இதன் துவக்க விழா நடைபெறவிருக்கிறது.
அத்தோடு பாலைவனத்தூது நடத்திய கட்டுரைப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.
பாலைவனத் தூது வலைப்பூ வழங்கி வரும் உள்நாட்டுச் செய்திகள், உலகச் செய்திகள், கட்டுரைகள், விமர்சனங்கள், சிந்தனைக்கு, மனதோடு மனதாய்..., மீடியா உலகில் முஸ்லிம்கள் தொடர்,... போன்ற அனைத்து அம்சங்களோடு, இன்னும் சில புதிய பகுதிகளும் "தூதுஆன்லைன்.காம்" இணையதளத்தில் புதுப்பொலிவுடன் இடம் பெறவிருக்கிறது.
இதுவரை பாலைவனத்தூது வலைப்பூவில் 7,000-த்திற்கும் மேற்பட்ட செய்திகளும், கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன!. ஏப்ரல் 2009 முதல் தற்போது வரை, சுமார் 32 லட்சத்திற்கும் மேற்பட்ட வருகைகள் பதிவாகியுள்ளன என்பதையும் இந்த சந்தோஷமான தருணத்தில் உங்களிடம் பகிர்ந்துக் கொள்கின்றோம்.
பாலைவனத் தூதுவின் இந்தச் சாதனை, அது அடைந்துள்ள வளர்ச்சி என்பது வல்ல இறைவனின் பெருங்கருணையினாலும், வாசகர்களாகிய உங்களின் பேராதரவினாலும் மட்டுமே சாத்தியமானது என்பதை மீண்டும் தெரியப்படுத்திக் கொள்கிறோம். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
உங்கள் பேராதரவைத் தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம்.
பாலைவனத் தூதுக்காக அல்லும் பகலும் உழைத்து வரும் அருமைச் சகோதரர்களின் இம்மை, மறுமை வெற்றிக்காக வல்ல இறைவனிடம் இதயங்கனிந்து இறைஞ்சுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தூது குடும்பம்
மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சகோதரர் தமீமுன் அன்சாரி அவர்கள் நமது தூது ஆன்லைனிற்கு அளித்த சிறப்புப் பேட்டி.
டோக்கியோ,மார்ச்.13:ஜப்பானில் சுனாமி பேரழிவைத் தொடர்ந்து புகஷிமா அணுமின் நிலையத்தில் இரண்டாவது அணு உலையிலும் வெப்பமும், அழுத்தமும் அதிகரித்துள்ளதால் அந்நாடு அணு விபத்து பீதியில் ஆழ்ந்துள்ளது.